Sunday, November 12, 2017

கடவுளுக்கு உருவம் உண்டா?

சிலைகளைக் கும்பிடுவது
சரியா? என்ற முஸ்லிம் அன்பரின் கேள்விக்கு ரமணமஹரிஷி  பதில்

ஒரு நாள் இரண்டு முஸ்லீம் அன்பர்கள் அவரை நாடி வந்தனர். அவர்களுக்கு உருவ வழிபாடு பற்றி சந்தேகம் இருந்தது.

பக்தர்: கடவுளுக்கு உருவம் உண்டா?

மஹரிஷி: அப்படி என்று யார் சொன்னது?

பக்தர்: அப்படி என்றால், கடவுளுக்கு உருவம் இல்லை என்றால், சிலைகளைக் கும்பிடுவது சரியா?

மஹரிஷி: கடவுளை விட்டு விடுவோம். ஏனென்றால் அவர் யாருக்கும் பிடிபடாதவர். உங்களை எடுத்துக் கொள்வோம். உங்களுக்கு உருவம் உண்டா?

பக்தர்: ஆம், எனக்கு உருவம் உண்டு; பெயர் உண்டு.

மஹரிஷி: அப்படி என்றால் உடல் அங்கங்களைக் கொண்ட ஒரு மனிதர் நீங்கள். ஆறடி உயரம், தாடி கொண்டவர். சரி தானே!

பக்தர்: நிச்சயமாக அப்படித்தான்!

மஹரிஷி: சரி, அப்படியானால் தூங்கும் போது உங்களை நீங்கள் காண்கிறீர்களா?

பக்தர்: விழித்து எழுந்தவுடன் நான் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறேன் என்பது தெரிகிறது. ஆகவே, அநுமானத்தின் மூலமாக நான் இப்படி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருக்கிறேன் என்பது தெரிய வருகிறது.

மஹரிஷி: நீங்கள் உடல் தான் என்றால் இறந்த பிறகு சவத்தை ஏன் புதைக்க வேண்டும்? உடல் தன்னைப் புதைப்பதை எதிர்க்க அல்லவா வேண்டும்?

பக்தர்: இல்லை, நான் பரு உடலில் உள்ளே இருக்கின்ற உள்ளுறை ஜீவன்.

மஹரிஷி: ஓ! அப்படி என்றால் உண்மையிலேயே நீங்கள் உருவம் இல்லாதவர் என்றாகிறது. ஆனால் இப்போது உடல் மூலமாக உங்களை அடையாளம் கண்டு சொல்கிறீர்கள். இப்படி உடலுடன் இருக்கும் போது அடையாளம் காணும் நீங்கள், உருவம் இல்லாத கடவுளை உருவமாகக் காண்பதில் என்ன தவறு இருக்கிறது?

கேள்வி கேட்டவர் திகைத்து விட்டார்.

Thursday, November 2, 2017

பசும்பொன் தேவர் அய்யா

திருநீறு பூசிய சைவசமய காவலர் தேவர் பெருமகனார்...!!!

தேவர் பெருமகனார் வாழ்ந்தகாலத்தில் தமிழகத்தில் திராவிடமும், நாத்திகமும் போயாட்டம் ஆடியது. பாரம்பர்ய சைவக் குடும்பங்களே திருநீறு இடாமல் தனிதமிழ் இயக்க மாயையில் சிக்கித் தவித்தனர்.

ஆனால்  தேவர் திருமகனார் நெற்றி நிறைய திருநீறோடு தமிழகத்தை வலம் வந்தார்.

ஒரு முறை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வடக்காடி வீதியில் மதுரை தமிழ்ச்சங்க பொன்விழா நடந்து. இச்சங்க தலைவராக இருந்த திரு பி.டி. ராஜன் அவர்கள், தாம் பேசவேண்டிய நான்காம் நாளில் தமக்கு பதிலாக அண்ணாவை பேசஅழைத்தார்.

அன்றைய விழாவில், மணிமேகலை என்ற சிறு குழந்தை அழகாக பேசி பரிசு பெற்றது.

இதற்க்கு பின் பேசிய அண்ணா, இந்த குழந்தை அருமையாக பேசினாள். அந்த காலமாக இருந்தால், ஞானப்பால் உண்டார் -ஞானம் பெற்றார் என்று கதைக் கட்டி இருப்பார்கள் என்று ஞானசம்பந்தரை  கிண்டல் செய்து பேசினார்.

இதனை கேள்விப்பட்ட தேவர் வெகுண்டு எழுந்தார். அன்னை மீனாட்சி கோயில் திருவீதியில் நாத்திகப் பேச்சா? அதுவும் சம்பந்தரை கிண்டல் செய்து? 

இது மதுரை தமிழ்சங்கமா அல்லது  நாத்திக சங்கமா?

தமிழ் ஞானசம்பந்தன் என்று வரிக்கு வரி உரைத்த சம்பந்தரை தமிழ்சங்கம் என்று பெயர் வைத்தோர் கௌரவப்படுத்தும் விதம் இதுதானா? என்று இடியென முழங்கினார்.

இதனை கேள்வியுற்ற மதுரை தமிழ்ச்சங்கத்தார் நடுநடுங்கினர்.

6ம் நாள் பேசவேண்டிய தேவர், அண்ணா பேசிய மறுநாள் அதாவது 5ம் நாளே மேடையேறி, அன்னை மீனாட்சி ஆலய வீதியில் அவளின் தவக்குழந்தையை அவதூறாக பேசும் தைர்யம் எப்படி வந்தது. சம்பந்தர் வரலாறை கட்டுக்கதை என்று கோயிலில்  பேசலாமா? இவ்வாறு அருளாளர்களை விமர்ச்சிக்கும் தமிழ்சங்க விழாவை இனி கோயிலில் நடத்த அனுமதிக்கமுடியாது. தமிழ்சங்கம் என்ற பெயரில் நாத்தீகம் பேசுவீற்களோ என்று இடியயென முழங்கினார்.
வெகுண்டெழுந்தார்.

திருநீற்றுப் பதிகம் அருளிய மண்ணில் திருநீறு பூசிய தேவர்பெருமகனார்.

வேறுவழியின்றி தமிழ்சங்கத்தார் மறுநாளில் இருந்து விழாவை தமுக்கம் மைதானத்திற்க்கு மாற்றினார்கள்.

சம்பந்தபெருமானை ஒருவார்த்தை கூறியதற்க்காக வெகுண்டு எழுந்தார் தேவர்.

ஆனால் இன்று திருமுறைகளை மதிப்பதாக கூறிக்கொண்டு உடம்பெல்லாம் ருத்திராட்சம் தரித்துக்கொண்டு, தமிழின் பெயரில் நாத்திகவாதிகளோடும், கம்யூனிசவாதிகளோடும் மேடையில் பங்குபோட்டுக்கொண்டு பெயர் புகழுக்காக அலைபவர்களும் உள்ளனர். இதில் சம்பந்தர் ஆரியர் என்ற சொல்லாடல்  வேறு.

இன்று தேவர் திருமகனார் போன்ற ஆன்மீகமும்  வீரமும் ஒருங்கே அமையப்பெற்ற தலைவர்  இல்லாமையல் வந்த வினைகள் இவை.

Sunday, September 3, 2017

ஓணம் பண்டிகை

ஓணத்துக்கும் தமிழனுக்கும் என்ன சம்பந்தம் சொல்லி ஒரு கூட்டம் கிளம்பி இருக்கனுமே.....

ஓணத்தின் தொடக்கம் தமிழகத்தில் உள்ள வேதாரண்யம் நகரில் இருக்கும் தேவார பாடல் பெற்ற தலமாகிய திருமறைக்காடு  ஆகும்.

ஒருமுறை பசியுடன் இருந்த #எலி ஒன்று திருமறைக்காடு கோவில் தீபத்தில் உள்ள நெய்யைத் தனக்கு ஆகாரமாக உட்கொள்ள வந்தது. தன்னையறியாமல் எலி தன் மூக்கால் அச்சமயம் அணையும் தருவாயிலிருந்த தீபத்தின் திரியை தூண்டிவிட்டதால் தீபம் சுடர் விட்டுப் பிரகாசிக்க ஆரம்பித்தது. சிவன் கோவில் விளக்கு அணையாமல் காத்த பயனின் காரணமாக #எலி அடுத்த பிறவியில் சிவபெருமானின் அருளால் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறக்க நேர்ந்தது. இதன் விபரத்தை திருநாவுக்கரசர் தனது திருக்குறுக்கை சிவஸ்தலம் பதிகத்தில் எட்டாம் திருப்பாட்டில் (4-ம் திருமுறை - "ஆதியில் பிரமனார் தாம்" என்று தொடங்கும் பதிகம்) தெரிவிக்கிறார்.

நிறை மறைக்காடு தன்னில் நீண்டு எரி தீபந் தன்னைக்
கறை நிறத்து  எலி தன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட
நிறை கடல் மண்ணும் விண்ணும் நீண்ட வானுலகம் எல்லாம்
குறைவறக் கொடுப்பர் போலும் குறுக்கைவீரட்டனாரே

விளக்கம் :

மந்திர சித்தி நிறைந்த வேதங்கள் பூசித்த மறைக்காட்டில் நீண்டு எரியும் விளக்கில்
ஊற்றியுள்ள நெய் தனைக் கறுத்த நிறத்தை உடைய #எலி உண்ண வந்த போது  அதன் மூக்கினை அத்தீப்பிழம்பு சுட்டிட அதனால் வெகுண்டு திரியைத் தூண்டி  விளக்கு நல்ல ஒளியோடு எரியச் செய்ய அந்த எலிக்கு மறுபிறப்பில் கடலால்
சூழப்பட்ட நிலஉலகம், தேவர் உலகம், நீண்ட மேலுலகங்கள் ஆகியவற்றை
எல்லாம் ஆளுமாறு மகாபலி சக்கரவர்த்தியாக பிறக்கச் செய்து
குறைவற வழங்கினார் குறுக்கை வீரட்டனார்.

----------------------------------------------------------------------------------

இனி யாராவது  ஓணத்துக்கும் தமிழனுக்கும் என்ன சம்பந்தம் கேட்ப்பேங்க.........

தென்னாடுடைய #சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

ரிக், யஜுர், சாம, அதர்வன வேதங்கள் ஆகிய நான்கு வேதங்களும் இத்தலத்திலுள்ள ஈசனை பூசித்த பெருமையை திருமறைக்காடு பெற்றுள்ளது.

நான்கு வேதங்களும் மனித உருவில் அருகிலுள்ள நாலுவேதபதி என்ற இடத்தில் இருந்து  கொண்டு இத்தலத்து இறைவனை முறைப்படி வழிபட்டு வந்தன.

கலியுகம் ஆரம்பிப்பதற்கு முன்பு இனிமேல் பூமியில் இருப்பது கடினம் என்றுணர்ந்த வேதங்கள் கோவிலின் முன்கதவுகளை நிரந்தரமாகப் பூட்டிவிட்டு சென்றன. அதுமுதல் பல ஆண்டுகளாக ஊர் மக்கள் பக்கவாட்டில் உள்ள ஒரு சிறிய திட்டிவாசல் வழியாகவே கோவிலினுள்ளே சென்று வந்தனர்.

ஒருமுறை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் திருமறைக்காட்டிற்கு வருகை புரிந்தனர். ஊர் மக்கள் யாவரும் சிறிய திட்டிவாசல் வழியாக கோவிலின் உள்ளே செல்வதையும், கோவிலின் முன்கதவுகள் மூடி இருப்பதையும் பார்த்து விபரம் கேட்டனர். வேதங்கள் பூசித்து மூடிவிட்டுப் போயிருந்த கதவுகளை பதிகம் பாடி திருநாவுக்கரசர் திறக்கவும், திருஞானசம்பந்தர் பதிகம் பாடி திறந்த கதவை மூடவும் செய்த அற்புதம் நிகழ்ந்த தலம் திருமறைக்காடு.

அப்பரும் சம்பந்தரும் பதிகம் பாடி மூடிய கதவை திறக்கவும் மூடவும் செய்த நிகழ்ச்சி இத்தலத்தில் பிரம்மோத்சவ விழாவாக மாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

இத்தலத்தில் தான் #திருஞானசம்பந்தர் கோளறு திருப்பதிகம் பாடியருளினார்.

பாண்டிய நாட்டு அரசி மங்கையர்க்கரசி பாண்டிய நாடு வரவேண்டும் என்று சம்பந்தருக்கு அழைப்பு விட்டார். மதுரை செல்வதற்கு முன் திருமறைக்காட்டில் தங்கியிருந்த திருநாவுக்கரசரிடம் கூறிவிட்டுப் போக வந்தார். மதுரையில் உள்ள சமணர்கள் கொடுந்தொழில் செய்பவர்களென்றும் தற்போது நாளும் கோளும் நன்றாக இல்லையென்று சொல்லி சம்பந்தர் மதுரை செல்ல வேண்டாம் என்று அறிவுரை கூறினார். அதற்கு சம்பந்தர் சிவபெருமானை வழிபடும் அடியார்களுக்கு நாளும் கோளும் நன்மையே செய்யும் இடர் செய்யாது என்று கூறி கோளறு திருப்பதிகம் பாடியருளினார்.

----------------------------------------------------------------------------

சிவதலம் பெயர் :திருமறைக்காடு (தற்போது வேதாரண்யம் என்று வழங்குகிறது)

இறைவன் பெயர் :மறைக்காட்டுநாதர், வேதாரண்யேசுவரர்

இறைவி பெயர் : வேதநாயகி, யாழினு இனிய மொழியாள்

செல்லும் வழி: திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக சுமார் 65 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து தெற்கே சுமார் 50 கி.மி. தொலைவிலும் வேதாரண்யம் உள்ளது. திருவாரூர், தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகள் செல்கின்றன. இங்கிருந்து 2 கி.மி. தொலைவில் அகஸ்தியம்பள்ளி என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இருக்கிறது.

Wednesday, August 16, 2017

சுதந்திர வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மை.

சுதந்திர வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மை.

இந்தியாவுக்கு  சுதந்திரம் தரும் நிகழ்வு  எப்படி நடந்தது தெரியுமா?

சுதந்திரம் கொடுப்பதற்கு  ஆங்கில அரசு சார்பில் மௌன்பேட்டன் நியாயமான செய்யபட்டு இருந்தார்.

இந்திய சார்பில் யார் வாங்கினார் தெரியுமா?  காந்தியா? நேருவா?

இவர்கள் யாரும் இல்லை.

சுதந்திர போராட்ட பெருமக்கள் விருப்பத்தின் படி

திருவாவடுதுறை ஆதினம் "ஶ்ரீ தம்பிரான் சாமிகள் " தான் சுதந்திரத்தின் அடையாளமாக செங்கோலை மௌன்பேட்டனிடம் இருந்து பெற்றார்

செங்கோலை வாங்கும் போது திருஞானசம்பந்தர் அருளிய செய்த "கோளறு திருப்பதிகம்" பாடினார் என்பது வரலாறு.

தமிழ் தமிழ் என்று பிரிவினை
பேசும் இந்த திராவிட கட்சிகள் இவற்றை மறைத்து விட்டது.

இதுவே வேறு மாநிலமாக இருந்தால் இதை எத்தனை பெருமை கெண்டு கொண்டாடி மகிழ்ந்து இருப்பார்கள்?

இந்து மத பாடல் என்பதால் இந்த இழிவு செய்தது இந்த இந்து மத  விரோத திராவிட கட்சிகள்.

இனியாவது திராவிட கட்சிகளை ஆதரிப்பதை நிறுத்துவோம்

Monday, May 8, 2017

இறந்து போதல் என்றால் என்ன?

ஸ்ரீரமண மகரிஷி

இறந்து போதல் என்றால் என்ன?

அப்பாவை எப்படி தகனம் பண்ணியிருப்பார்கள், நெருப்பு மூட்டி எரித்தால் வலிக்காதா, ஏன் வலிக்காமல் போயிற்று, எது இருந்தால் வலி, எது இழந்தால் மரணம். எது இருந்தால் என்று தன்னைத்தானே உற்றுப் பார்த்தான். எது இருக்கிறது உள்ளே என்று மெல்ல தேடினான்.இறந்து போதல் என்றால் எது வெளியே போகவேண்டும் என்று மறுபடியும் ஆராய்ந்தான். இப்படி உட்கார்ந்து பார்த்தால் தெரியுமா, இறந்து போனால் தானே தெரியும்.'

இறந்து போனது என்றால் நீட்டி படுக்க வேண்டும். அவன் சட்டென்று கால் நீட்டி படுத்துக் கொண்டான். உடம்பை விறைப்பாக்கினான்.

' இப்ப உடம்பு செத்துவிட்டது. இந்த உடம்புக்கு மரணம் வந்துவிட்டது. நான் இறந்து விட்டேன். இப்பொழுது கொண்டு போய் தகனம் செய்ய போகிறார்கள். அண்ணா தான் மறுபடியும் நெருப்பு சட்டி தூக்கிக் கொண்டு போகவேண்டும். ஆடி ஆடி தூக்கிக் கொண்டு போய், சுடுகாட்டில் வைத்து விறகு அடுக்கி, கொளுத்தி விடுவார்கள். இந்த உடம்பு மெல்ல மெல்ல நெருப்புபட்டு சாம்பலாகிவிடும்.. ஒன்றுமே இருக்காது. உடம்பு காணாமல் போய்விடும். எது இருப்பதால் நான் இருக்கிறேன், எது இருப்பதால் நான் படுத்து இருக்கிறேன். எது இல்லாது போனால் நான் இறந்து விடுவேன்.' வேங்கடராமன் உற்று ஆழ்ந்து எது இருக்கிறது என்று பார்த்தான்.

வேங்கடராமனின் மூச்சில் மாறுதல் ஏற்பட்டது. மனம் அடங்க, முச்சும் அடங்கும், மூக்கில் இருந்து ஓரடி தூரம் வெளிவருகின்ற காற்று மெல்ல சுருங்கிற்று. மனதில் உள்ளுக்குள் ஆழ்ந்து எது இருக்கிறதோ என்று பார்க்க, மூச்சு விடுவது மூக்கின் எல்லைவரை இருந்தது. இன்னும் ஆழ்ந்து எது இருக்கிறது, எது இழந்தால் மரணம் என்று உற்று பார்க்க மூச்சானது மேல்மூக்கு வரை நின்றது.

' அட இதோ, இந்த இடத்தில்தான், இந்த இடத்தில்தான் ஏதோ இருக்கிறது. அதனுடைய இருப்பால்தான் உடம்பினுடைய எல்லா விஷயங்களும் ஆடுகின்றன.' இன்னும் உற்று பார்க்க, மூச்சானது வெளியே போகாமல், தொண்டைக் குழியில் இருந்து நுரையீரலுக்கு போயிற்று. நுரையீரலிலிருந்து தொண்டைக்குழிக்கு வந்தது. தொண்டைக்குழியில் இருந்து நுரையீரலுக்கு போயிற்று . இன்னும் உற்றுப் ஆழ்ந்து பார்க்க வேங்கடராமன் உடம்பு வேகமாக விறைத்தது. உடம்பினுள்ள மற்ற புலன்களுடைய ஆதிக்கங்கள் தானாய் இழந்தன. இரத்த ஓட்டம் வேறு மாதிரியான கதிக்கு போயிற்று. இறந்த போது உடம்பு விறைக்குமே, அந்த விறைப்புத்தன்மை உடம்பில் சட்டென்று ஏற்பட்டது.

அவன் அந்நியமாய் நின்று வேடிக்கை பார்த்தான். மூச்சானது இப்பொழுது மெல்ல நுரையீரலில் இருந்து சிறிது தூரம் வெளிப்பட்டு மறுபடியும் நுரையீரலுக்கு போயிற்று. மூக்கு அருகே, தொண்டை அருகே வராது, மூச்சு குழாய் அருகே கொஞ்சம் தூரம் போய்விட்டு மறுபடியும் பின் திரும்பியது. மூச்சு இருந்தது. ஆனால் முழுவதுமாக இல்லாது, ஒரு காளை கொம்பு போல அதே அளவோடு சிறிது வளைவோடு மூச்சு எகிறி வெளியே போய் மறுபடியும் நுரையீரலுக்கு வந்தது.

மனம் அடங்க, மூச்சும் அடங்கும். மூச்சு அடங்க, மனமும் அடங்கும். இரண்டு காளை கொம்புகளாய் மூச்சு அசைந்து கொண்டிருந்த பொழுது, சட்டென்று உள்ளுக்குள்ளே ஒரு பேரொளி தோன்றியது. தாங்க முடியாத அதிர்ச்சி வந்தது. இரண்டு மூச்சுக்கு நடுவேயும், இரண்டு காளைக் கொம்புகளுக்கு நடுவேயும், ஏதோ ஒன்று பிரகாசமாக ஆடியும், ஆடாமலும், அசைந்தும், அசையாமலும் மிக பொலிவோடு நின்று கொண்டு இருந்தது. எண்ண ஓட்டங்கள் சில்லென்று நின்றன. அது, அந்த பேரொளி , எண்ணத்தை விழுங்கியது. எண்ணம் விழுங்கப்பட, 'நான்' என்ற அகந்தையும் உள்ளே விழுங்கப்பட்டது.

' நான்' என்கிற எண்ணம் காணாமற் போக , பேரொளியே தானாகி வேங்கடராமன் கிடந்தான். சகல உயிர்களையும் விழுங்கி நிற்பது என்பது தெரிந்தது. இதுவே நிரந்தரம். இதுவே முழுமை. இதுவே இங்கு இருப்பு. இதுவே இங்கு எல்லாமும். இதுவே முதன்மை, இதுவே சுதந்திரம், இதுவே பரமானந்தம், இதுவே பூமி, இதுவே பிரபஞ்சம், இதுவே அன்பு, இதுவே கருணை, இதுவே அறிவு. இதுவே ஆரோக்கியம். அனைத்து இடங்களிலும் நீக்கமற நிற்கின்ற அற்புதம் . இதுவே எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறது.

மூடிய கண்களில் பெரிய வெளிச்சம், மூடாத காதுகளில் ரீங்காரம், உடம்பு முழுவதும் புல்லரிக்க வைக்கும் தகதகப்பு, புத்தியில் ஒரு திகைப்பு, உள்ளங்காலில் ஒரு சுகவேதனை, ஆசனவாய் இழுத்து சுருங்கி கொண்டு கழுத்து வரை ஒரு சக்தியை தள்ளி அனுப்புகிறது. முதுகு தண்டில் ஒரு குடையல், நெஞ்சு துடிப்பு நிதானம், இருதயத்தில் அழுத்திய கனம், தொண்டையில் ஒரு சுழல், நெற்றியில் ஒரு குறு குறுப்பு, உச்சி மண்டையில் ஒரு அக்னி, ஆஹா ஆஹா எல்லா இடமும் நீக்கமற நிறைந்திருக்கிறதே. அதுவே அதுவே, வேங்கடராமனின் மனம் மெல்ல விழித்து கொண்டு அலறியது.

திரும்பி எழுந்திருக்க அரைமணி நேரம் ஆயிற்று. வேங்கடராமன் எழுந்து சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டான். எதிரே இருந்த சுவர் பார்த்து வெறுமே அழுதான். பிறகு காரணமின்றி சிரித்தான். மீண்டும் அழுதான். எழுந்து நின்று சுவர் மூலையில் சாய்ந்து கொண்டான்.

தள்ளாடி வாசல் நோக்கி நகர்ந்தான். வேகமாக தாவி ஏறும் மாடிப்படி அன்று பார்க்க பயமாக இருந்தது. உருண்டு விழுந்து விடுவோமோ என்று தோன்றியது.

' என்ன நடந்தது எனக்கு, என்ன நடந்தது எனக்கு' ஒவ்வொரு படியாய் மெல்ல இறங்கி வந்தான்.

' உள்ளே இருப்பது நான். அதுதான் நான்' ஒருபடி இறங்கினான்.

' இந்த உடம்பு நான் அல்ல, இந்த புத்தி நானல்ல, என் சக்தி நானல்ல, என் மனம் நானல்ல' ஒவ்வொரு படி இறங்கும் போதும் அவனுக்குள் தெள்ளத்தெளிவாய் விஷயம் புரிந்தது.

'உள்ளே பேரொளியாய், சுடராய் இருந்து இருக்கிற அதுவே நான். அதுவே எல்லாருள்ளும். எனக்குள் இருப்பதே எல்லா இடத்திலும் இருக்கிறது. நான் தான் அது, நான் தான் சித்தி, நான் தான் சித்தப்பா, நான் தான் அண்ணா, நான் தான் தெரு நாய், நான் தான் வண்டு, நான் தான் பசுமாடு, நான் தான் மாடப்புறா, நான் தான் எல்லாமும்.

ஒருமை எப்படி பன்மையாகும். இது மிகப் பெரிய தவறு. 'நான்' என்பது எல்லாவிதமாகவும் விளங்கியிருக்கிறபோது, எல்லாமுமாய் பிறந்து இருக்கிற போது, என்னிலும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம். என்ன வேறுபாடு. ஒருமை எப்படி பன்மையாகும்' பத்தாவது படியில் இறங்கி நின்றான். மாடிப்படி திரும்பினான். சிரித்தான்.

' இதை யாரிடம் போய் சொல்வது, இப்படி நடந்தால் என்ன அர்த்தம் என்று விளக்கம் கேட்பது, நான் சரியாக புரிந்து கொண்டு இருக்கிறேனா, எனக்கு ஏதோ நடந்தது, அது சரியாக நிகழ்ந்ததா, தூக்கமா, பிரமையா அல்லது உள்ளுக்குள் இருப்பது தான் வெளிப்பட்டதா'

அவன் இறங்கி நடந்து கோயிலுக்குள் போனான். மதுரை சுந்தரரேஸ்வரரை பார்த்து கைகூப்பினான். அந்த கைகூப்பலில் நன்றி இருந்தது, நெகிழ்வு இருந்தது, சந்தோஷம் இருந்தது, அமைதி இருந்தது, அன்பு இருந்தது, ஒரு ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடிற்று. எல்லாம் கரைந்து மனம் முழுவதும் ஒன்றாகி அவன் மறுபடியும் சுவாமியை நமஸ்கரித்தான். மறுபடியும் போய் அவ்விதமே ஆழ்ந்து உட்கார்ந்து கொள்ள வேண்டும் அல்லது படுத்து அந்த அனுபவத்தை மறுபடியும் அனுபவிக்க வேண்டும் என்று தோன்றியது. மீண்டும் நீங்க வரணும் என்று மதுரை சுந்தரரேஸ்வரரை கைகூப்பி இறைஞ்சினான்.

ஊர் முழுவதும் சுற்றி விட்டு வீடு திரும்பும் போது ஒரு காலியான பாத்திரம் போல வேங்கடராமன் நடந்தான். அந்த பாத்திரத்தை நிரம்ப இறையருள் காத்திருந்தது. தன்னை சுத்தம் செய்து கொள்வது என்பது எல்லோருக்கும் நடப்பது இல்லை, வெகு சிலருக்கே நடக்கிறது. அப்படி நடந்தவர்களுக்குத்தான் ஞானியர் என்றும், மகான் என்றும் பெயர்.

வேங்கடராமன் என்கிற அந்த பதினாறு வயது இளைஞன் பிற்பாடு ஸ்ரீ ரமண மகரிஷி என்று அழைக்கப்பட்டார். பகவான் என்று பலர் அவரை வணங்கினார்கள்.

ஈசனே மெய்யான தெய்வம்

கடவுள் என்று நினைத்து நீங்கள் யாரை வணங்கினாலும் சரி அது பிரம்மா, பெருமாள், ஏசு நாதர், அல்லா, புத்தன், கணபதி, முருகன், காளி  இப்படி யாராக இருந்தாலும் சரி அவர்களுக்கு சக்தி இருக்கிறதோ இல்லையோ? அவர்கள் உங்களுக்கு அருள் கொடுக்கிறாரோ இல்லையோ?

உங்கள் நம்பிக்கை வீன் போகாமல் இவர்களால் முடியவில்லை என்றாலும் கட்டாயம் அங்கு நமக்கு அருள் கொடுக்க நம் ஈசனார் வருவார் இவரே மெய் இவரே அனைத்தும்.



யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர் மற்றத் தெய்வங்கள்
வேதனைப்படும் பிறக்கும் இறக்கம் மேல் வினையும் செய்யும்
ஆதாலல் அவை இலாதான் அறிந்து  அருள் செய்வன் அன்றே
                                                            சிவஞான சித்தியார்

கடவுள் யார்? அவர் இலக்கணம் என்ன? என்று தெரியாத நிலையில் பெரும்பாலானோர் எதையோ ஒரு தெய்வம் என்று நம்பி, அல்லது எதுவும் தெய்வம் தான் என்று நம்பி வழிபாடு செய்து வருகிறார்கள்.

ஆனால்‌ அனைவரும் வழிபடும் ஏதோ ஓரு தெய்வத்தின் வடிவாக வந்து அருள் செய்பவர் நம் மாதொரு பாகராகிய சிவபெரு‍மான்தான்.

அனைவரும் வழிபடும் மற்றத் தெய்வங்கள்  அவர்களுக்கு அருள் செய்யப் போவதில்லை.காரணம் அவை பிறப்பு இறப்பு வேதனைப்படுவன.  பிறப்பெடுத்து வாழும் போது. அத்தெய்வங்கள் மீண்டும் மீண்டும் பிறப்பெடுப்பதற்குக் காரணமான வினைகளையும் செய்கின்றன. அத்தெய்வங்களைப் பற்றிய வரலாறு (புராணங்களால்) செய்திகளால் இவற்றை நாம் அறியலாம்.

அறியாமையால் மற்ற தெய்வங்களைக் குறித்து வழிபாடு செய்கிறவர்கள்மேல் இரக்கப்பட்டு அத்தெய்வங்கள் வடிவாக இருந்து அருள்செய்பவர் பிறப்பு இறப்பு வேதனை இல்லாத சிவபெருமான் மேல் வினைகள் செய்யாத சிவபெருமான். அனைத்துமே சிவமாக இருக்கும் போது நாம் தவறு என்று சொல்பவரின் உள்ளே இருப்பவர் கூட நம் ஈசனார் தானே


Saturday, May 6, 2017

கந்தர் அநுபூதி

அருணகிரிநாத சுவாமிகள் அருளிய
கந்தர் அநுபூதி

காப்பு






நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொற் புனை மாலை சிறந்திடவே 
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்.

நூல்



( 1)  ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில் 
சாடும் தனி யானைச் சகோதரனே.

( 2)  உல்லாச, நிராகுல, யோக இதச் 
சல்லாப, விநோதனும் நீ அலையோ?
எல்லாம் அற, என்னை இழந்த நலம்
சொல்லாய், முருகா சுரபூ பதியே

( 3)    வானோ? புனல் பார் கனல் மாருதமோ?
ஞானோ தயமோ? நவில் நான் மறையோ?
யானோ? மனமோ? எனை ஆண்ட இடம்
தானோ? பொருளாவது சண்முகனே.

(  4)    வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்
தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?
கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,
தொளைபட்டு உருவத் தொடு வேலவனே.



(  5)    மக மாயை களைந்திட வல்ல பிரான்
முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனே
அகம் மாடை, மடந்தையர் என்(று) அயரும்
சகமாயையுள் நின்று தயங்குவதே



(  6)    திணியான மனோ சிலை மீது, உனதாள்
அணியார், அரவிந்தம் அரும்பு மதோ?
..
பணியா? .. என, வள்ளி பதம் பணியும்
தணியா அதிமோக தயா பரனே.

  (7)    கெடுவாய் மனனே, கதி கேள், கரவாது
இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடு வேதனை தூள்படவே
விடுவாய் விடுவாய் வினை யாவையுமே.

(  8)    அமரும் பதி, கேள், அகம் ஆம் எனும் இப்
பிமரம் கெட மெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பெரு தானவ நாசகனே.

(  9)    மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டு, ஊசல்படும் பரிசு என்று ஒழிவேன்?
தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும்
நிட்டூர நிராகுல, நிர்பயனே.

( 10)கார் மா மிசை காலன் வரில், கலபத்
தேர்மா மிசை வந்து, எதிரப் படுவாய்
தார் மார்ப, வலாரி தலாரி எனும்
சூர்மா மடியத் தொடுவே லவனே.

(11)கூகா என என் கிளை கூடி அழப்
போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலு கவித்
தியாகா சுரலோக சிகாமணியே.

(12)செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன், பிறவான், இறவான்
..
சும்மா இரு, சொல் அற .. என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.

(13)முருகன், தனிவேல் முனி, நம் குரு ... என்று
அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ
உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று,
இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே.

(14)கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
உய்வாய், மனனே, ஒழிவாய் ஒழிவாய்
மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம்
ஐவாய் வழி செல்லும் அவாவினையே.

(15)முருகன், குமரன், குகன், என்று மொழிந்து
உருகும் செயல் தந்து, உணர்வு என்று அருள்வாய்
பொரு புங்கவரும், புவியும் பரவும்
குருபுங்கவ, எண் குண பஞ்சரனே.

(16)பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
ஓரா வினையேன் உழலத் தகுமோ? 
வீரா, முது சூர் பட வேல் எறியும்
சூரா, சுர லோக துரந்தரனே.

(17)யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும்
தாமே பெற, வேலவர் தந்ததனால்
பூ மேல் மயல் போய் அறம் மெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர், நடவீர் இனியே.

(18)உதியா, மரியா, உணரா, மறவா,
விதி மால் அறியா விமலன் புதல்வா,
அதிகா, அநகா, அபயா, அமரா
பதி காவல, சூர பயங் கரனே.

(19)வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடி அந்தம் இலா அயில் வேல் அரசே
மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே.

(20)அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியவா
விரிதாரண, விக்ரம வேள், இமையோர்
புரிதாரக, நாக புரந்தரனே.

(21)கருதா மறவா நெறிகாண, எனக்கு
இருதாள் வனசம் தர என்று இசைவாய்
வரதா, முருகா, மயில் வாகனனே
விரதா, சுர சூர விபாடணனே.

(22)காளைக் குமரேசன் எனக் கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளைச் சுர பூபதி, மேருவையே.

(23)அடியைக் குறியாது அறியா மையினால்
முடியக் கெடவோ? முறையோ? முறையோ?
வடி விக்ரம வேல் மகிபா, குறமின்
கொடியைப் புணரும் குண பூதரனே

(24)கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன், அருள் சேரவும் எண்ணுமதோ
சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்
போர் வேல, புரந்தர பூபதியே.

(25)மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து
ஐயோ, அடியேன் அலையத் தகுமோ?
கையோ, அயிலோ, கழலோ முழுதும்
செய்யோய், மயில் ஏறிய சேவகனே.

(26)ஆதாரம் இலேன், அருளைப் பெறவே
நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே
வேதாகம ஞான விநோத, மன
அதீதா சுரலோக சிகாமணியே.

(27)மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயன் இங்கு இதுவோ?
பொன்னே, மணியே, பொருளே, அருளே,
மன்னே, மயில் ஏறிய வானவனே.

(28)ஆனா அமுதே, அயில் வேல் அரசே,
ஞானாகரனே, நவிலத் தகுமோ?
யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே.

(29)இல்லே எனும் மாயையில் இட்டனை நீ
பொல்லேன் அறியாமை பொறுத்திலையே
மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே.

(30)செவ்வான் உருவில் திகழ் வேலவன், அன்று
ஒவ்வாதது என உணர்வித் ததுதான்
அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே.

(31)பாழ்வாழ்வு எனும் இப் படுமாயையிலே
வீழ்வாய் என என்னை விதித்தனையே
தாழ்வானவை செய்தன தாம் உளவோ?
வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே.

(32)கலையே பதறிக், கதறித் தலையூடு
அலையே படுமாறு, அதுவாய் விடவோ?
கொலையே புரி வேடர் குலப் பிடிதோய்
மலையே, மலை கூறிடு வாகையனே.

(33)சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும்
விந்தாடவி என்று விடப் பெறுவேன்
மந்தாகினி தந்த வரோதயனே
கந்தா, முருகா, கருணாகரனே.

(34)சிங்கார மடந்தையர் தீநெறி போய் 
மங்காமல் எனக்கு வரம் தருவாய்
சங்க்ராம சிகாவல, சண்முகனே
கங்காநதி பால, க்ருபாகரனே.

(35)விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க் கழல் என்று அருள்வாய்?
மதி வாள்நுதல் வள்ளியை அல்லது பின்
துதியா விரதா, சுர பூபதியே.

(36)நாதா, குமரா நம என்று அரனார்
ஓதாய் என ஓதியது எப்பொருள் தான்?
வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்
பாதா குறமின் பத சேகரனே.

(37)கிரிவாய் விடு விக்ரம வேல் இறையோன்
பரிவாரம் எனும் பதம் மேவலையே
புரிவாய் மனனே பொறையாம் அறிவால்
அரிவாய் அடியோடும் அகந்தையையே.

(38)ஆதாளியை, ஒன்று அறியேனை அறத்
தீது ஆளியை ஆண்டது செப்புமதோ
கூதாள கிராத குலிக்கு இறைவா
வேதாள கணம் புகழ் வேலவனே.

(39)மாஏழ் சனனம் கெட மாயைவிடா 
மூஏடணை என்று முடிந்திடுமோ
கோவே, குறமின் கொடிதோள் புணரும்
தேவே சிவ சங்கர தேசிகனே.

(40)வினை ஓட விடும் கதிர் வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங்கிடவோ?
சுனையோடு, அருவித் துறையோடு, பசுந்
தினையோடு, இதணோடு திரிந்தவனே.

(41)சாகாது, எனையே சரணங் களிலே
கா கா, நமனார் கலகம் செயும் நாள்
வாகா, முருகா, மயில் வாகனனே
யோகா, சிவ ஞான உபதேசிகனே.

(42)குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே.

(43)தூசா மணியும் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினது அன்பு அருளால்
ஆசா நிகளம் துகளாயின பின்
பேசா அநுபூதி பிறந்ததுவே.

(44)சாடும் தனிவேல் முருகன் சரணம்
சூடும் படி தந்தது சொல்லு மதோ?
வீடும், சுரர் மாமுடி, வேதமும், வெம்
காடும், புனமும் கமழும் கழலே.

(45)கரவாகிய கல்வி உளார் கடை சென்று
இரவா வகை மெய்ப் பொருள் ஈகுவையோ?
குரவா, குமரா, குலிசாயுத, குஞ்
சரவா, சிவயோக தயாபரனே.

(46)எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்
கந்தா, கதிர் வேலவனே, உமையாள்
மைந்தா, குமரா, மறை நாயகனே.

(47)ஆறு ஆறையும் நீத்து அதன் மேல் நிலையைப்
பேறா அடியேன், பெறுமாறு உளதோ?
சீறாவரு சூர் சிதைவித்து, இமையோர்
கூறா உலகம் குளிர்வித்தவனே.

(48)அறிவு ஒன்று அற நின்று, அறிவார் அறிவில்
பிறிவு ஒன்று அற நின்ற, பிரான் அலையோ?
செறிவு ஒன்று அற வந்து, இருளே சிதைய
வெறி வென்றவரோடு உறும் வேலவனே.

(49)தன்னந் தனி நின்றது, தான் அறிய
இன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ?
மின்னும் கதிர் வேல் விகிர்தா, நினைவார்
கின்னம் களையும் க்ருபை சூழ் சுடரே.

(50)மதிகெட்டு அறவாடி, மயங்கி, அறக்
கதிகெட்டு, அவமே கெடவோ கடவேன்?
நதி புத்திர, ஞான சுகாதிப, அத்
திதி புத்திரர் வீறு அடு சேவகனே.

(51)உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.