கடவுள் என்று நினைத்து நீங்கள் யாரை வணங்கினாலும் சரி அது பிரம்மா, பெருமாள், ஏசு நாதர், அல்லா, புத்தன், கணபதி, முருகன், காளி இப்படி யாராக இருந்தாலும் சரி அவர்களுக்கு சக்தி இருக்கிறதோ இல்லையோ? அவர்கள் உங்களுக்கு அருள் கொடுக்கிறாரோ இல்லையோ?
உங்கள் நம்பிக்கை வீன் போகாமல் இவர்களால் முடியவில்லை என்றாலும் கட்டாயம் அங்கு நமக்கு அருள் கொடுக்க நம் ஈசனார் வருவார் இவரே மெய் இவரே அனைத்தும்.
யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர் மற்றத் தெய்வங்கள்
வேதனைப்படும் பிறக்கும் இறக்கம் மேல் வினையும் செய்யும்
ஆதாலல் அவை இலாதான் அறிந்து அருள் செய்வன் அன்றே
சிவஞான சித்தியார்
கடவுள் யார்? அவர் இலக்கணம் என்ன? என்று தெரியாத நிலையில் பெரும்பாலானோர் எதையோ ஒரு தெய்வம் என்று நம்பி, அல்லது எதுவும் தெய்வம் தான் என்று நம்பி வழிபாடு செய்து வருகிறார்கள்.
ஆனால் அனைவரும் வழிபடும் ஏதோ ஓரு தெய்வத்தின் வடிவாக வந்து அருள் செய்பவர் நம் மாதொரு பாகராகிய சிவபெருமான்தான்.
அனைவரும் வழிபடும் மற்றத் தெய்வங்கள் அவர்களுக்கு அருள் செய்யப் போவதில்லை.காரணம் அவை பிறப்பு இறப்பு வேதனைப்படுவன. பிறப்பெடுத்து வாழும் போது. அத்தெய்வங்கள் மீண்டும் மீண்டும் பிறப்பெடுப்பதற்குக் காரணமான வினைகளையும் செய்கின்றன. அத்தெய்வங்களைப் பற்றிய வரலாறு (புராணங்களால்) செய்திகளால் இவற்றை நாம் அறியலாம்.
அறியாமையால் மற்ற தெய்வங்களைக் குறித்து வழிபாடு செய்கிறவர்கள்மேல் இரக்கப்பட்டு அத்தெய்வங்கள் வடிவாக இருந்து அருள்செய்பவர் பிறப்பு இறப்பு வேதனை இல்லாத சிவபெருமான் மேல் வினைகள் செய்யாத சிவபெருமான். அனைத்துமே சிவமாக இருக்கும் போது நாம் தவறு என்று சொல்பவரின் உள்ளே இருப்பவர் கூட நம் ஈசனார் தானே
No comments:
Post a Comment