Sunday, January 29, 2017

நான்கு பேர் சென்ற பாதை



நான்கு பேர் சென்ற பாதையில் செல்ல வேண்டும் என்ற பழமொழி அனைவரும் கேள்வி பட்டிருப்பேர்கள். இப்படி கூறியதன் அர்த்தம் 

யாரோ நான்கு பேர் சென்ற பாதை இல்லை 

சிவ அடியார்கள் திருஞானசம்பந்தர் , திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் , சுந்தரர் இந்த நான்கு பேர் சென்ற பாதையில் போக வேண்டும் என்பதே அந்த பழமொழி கூறுவது 


Image result
இறைவன் சிவனை அடைய பல வழிகள் அதில் இந்த நான்கு பேர் காட்டிய வழியும் சிறப்பானது . 

திருஞானசம்பந்தர் காட்டிய இறைவனை தாய் தந்தையராக அணுகும் சத்புத்ர மார்க்கம்


திருநாவுக்கரசர் காட்டிய இறைவனை எசமானராய் அணுகும் தாச மார்க்கம்



மாணிக்கவாசகர் காட்டிய இறைவனை குருவாய் அணுகும் சன் மார்க்கம்




சுந்தரர் காட்டிய இறைவனை தோழனாக அணுகும் சக மார்க்கம்




நால்வர் சென்ற பாதையில் நாமும் செல்வோம் நற்றுணையாவது நமசிவாயவே

Wednesday, January 25, 2017

தமிழை காக்க முருக பெருமானே திருஞானசம்பந்தராக அவதாரம் எடுத்தார்

சிவாயநம. முருக பெருமான் தாண் மலர் வாழ்க

சைவ சமயத்தையும், தமிழையும் பிற சமயத்தவர்கள் அழிக்க நினைத்த போது சைவத்தையும் தமிழையும் காக்க அவதாரம் எடுத்தவர் திருஞானசம்பந்த சாமிகள்.



எப்பொழுதெல்லாம் சைவத்துக்கும் தமிழுக்கும் ஆபத்து வருகிறதோ அப்போது எல்லாம் எம்பெருமான் முருகன் அவதாரம் எடுப்பார். சமணர்களும் பௌத்தர்களும் நாடு கெடும் படி எல்லையற்ற துன்பங்களை கொடுத்து கொண்டு இருந்த போது முருக பெருமான் எடுத்த அவதாரமே திருஞானசம்பந்த சாமிகள்
முருகனே சம்பந்தர் என்று கூறும் அருணகிரியார்
சமணர்களும் பௌத்தர்களும் நாடு கெடும் படி எல்லையற்ற துன்பங்களை சிவ, சக்தி, விநாயக, முருகனை வழிபடுவோருக்கு இழைத்து வந்த கால கட்டத்தில் அவற்றை ஒரு நொடியில் பொடிப் பொடியாக்கிய அவதாரமாக உதித்தவர் திருஞானசம்பந்தர்.

அருணகிரிநாதர், இதை.
புத்தர் அமணர்கள் மிகவே கெடவே
தெற்கு நரபதி திருநீறிடவே
புக்க அனல்வய மிக ஏடுயவே உமையாள் தன்
புத்ரனென இசை பகர் நூல் மறை நூல்
கற்ற தவமுனி பிரமாபுரம் வாழ்
பொற்ப கவுணியர் பெருமானுருவாய் வருவோனே
என்று அழகுறத் தெளிவு படுத்துகிறார். (நெய்த்த கரிகுழலறலோ எனத் தொடங்கும் பாடல்)
பிரமாபுரம் வாழ் ஞானசம்பந்தரின் உருவாய் வந்தவன் முருகனே’ அவனே புத்தர், சமணரை ஓட்டி தெற்கு தேச அரசன் திருநீறிடும்படி அனல் வாதத்தில் ஜெயித்தவன் என்பதை இப்படி அழகுறக் கூறும் போது சின்னஞ் சிறு வயதில் சம்பந்தர் எப்படி எண்ணாயிரம் சமணரை வெல்ல முடிந்தது என்ற ரகசியத்தை அறிய முடிகிறது! முருகன் அல்லவா புத்த சமணரை, வென்றது!

சம்பந்தர் எனும் முருகனன்றி வேறு தெய்வம் இல்லை
கந்தர் அந்தாதியில் 29ஆம் பாடலில்
திகழு மலங்கற் கழல்பணிவார் சொற்படி செய்யவோ
திகழு மலங்கற் பகவூர் செருத்தணி செப்பிவெண்பூ
திகழு மலங்கற் பருளுமென்னாவமண் சேனையுபா
திகழு மலங்கற் குரைத்தோனலதில்லை தெய்வங்களே
என்று பாடுகிறார்.

திருஞானசம்பந்தரின் ஒவ்வொரு பதிகத்தின் 11ஆம் பாட்டும் திருக்கடைக்காப்பு என அழைக்கப்படும். அப்பதிகத்தைப் பாடுவோர்க்கு என்ன பலன் கிடைக்கும் என்பது இறுதிப் பாடலில் மிகத் தெளிவாக, உறுதியாகச் சொல்லப்பட்டிருக்கும்.

“தேவாரத் திருப்பதிகங்களை ஓதி தான் அவதரித்த சீர்காழியையும், தான் காத்தளித்த அமராவதியையும், கல்யாண சுபுத்திரனாக தான் நிற்கும் திருத்தணியையும் துதித்து அணியும் திருநீறு மும்மலத்தைப் போக்கும்.

முழுப் பொருள் இதுவே என நம்பும் கற்புடமையையும் தரும் என்று நினைக்காத சமண கூட்டங்களை வருத்தம் தரும் கழுமரத்தில் ஏற்றி கலக்கம் அடைந்து அழியும் படி வாது புரிந்த சம்பந்தப் பெருமான் ஆகிய முருகனன்றி வேறு பிரத்யட்சமான தெய்வங்கள் கிடையாது” என்பதே பாடலின் பொருள்.

முருகனே சம்பந்தர் என்பதைத் தெளிவாக அருணகிரிநாதர் சுட்டிக் காட்டிய இடங்களில் இதுவும் ஒன்று.
ஆக தேவார திருப்பதிகங்களை ஓதும் படி அருணகிரிநாதர் அருளுரை பகர்கிறார். திருஞானசம்பந்தரே முருகன் என்பதால் அவரது பதிகங்கள் குமரக் கடவுளின் வாயிலிருந்து உதித்த நேர் சொற்கள் என்பதையும் தெளிவு படுத்துகிறார்.
திருப்புகழை ஊன்றிப் படிப்போர்க்குப் பல ரகசியங்கள் தெரியவரும். முக்கியமான ரகசியங்களுள் ஒன்று முருகனே சம்பந்தராக அவதரித்துப் பல அற்புதங்களை நிகழ்த்தினார் என்பதாகும்!