Wednesday, December 5, 2018

சுற்றுகிற உலகத்திலே ரமணமாலை


Image result for annamalaiyar temple hd images

சுற்றுகிற உலகத்திலே
சுற்றுகிற உலகத்திலே,பலவிதத்தில் சுற்றுகிற மனிதர்களே...
வெற்றுக்கைகளுடன் பிறந்து பலவிதத்தில் பற்றுகளைப் பிடித்தவரே.....
இன்னும் ஒருமுறை பிறப்பீரா?மறுபடி மறுபடி இறப்பீரா?நற்பெருவழி வருவீரா?இல்லை ஒரு சிறுவழி போவீரா?
அண்ணாமலையை சுற்று சுற்று...அறுந்து போகும் பற்று
அண்ணாமலையை சுற்று சுற்று...அறுந்து போகும் பற்று
சுற்றுகிற உலகத்திலே,பலவிதத்தில் சுற்றுகிற மனிதர்களே...
வெற்றுக்கைகளுடன் பிறந்து பலவிதத்தில் பற்றுகளைப் பிடித்தவரே.....

அப்பனைசுற்றும் அம்மை உண்டு....அன்னையைசுற்றும் பிள்ளை உண்டு....
அப்பனைசுற்றும் அம்மை உண்டு....அன்னையைசுற்றும் பிள்ளை உண்டு....
கன்னியை சுற்றி வரும் காளையும் இங்குண்டு...
கன்னியையும் காளையயும் சுற்ற வைக்கும் காதலும் இங்குண்டு....
அட பாட்டன் போனான் ,அப்பன் போனான்,பிள்ளைகளும் அவன் பின்னாலே..
அரசன் போனான் ,ஆண்டி போனான்,தொடர்ந்து சென்றவரும் பின்னாலே...
சுற்றிச்சுழன்றவர் வாழ்கயிலே,சுகத்தில் இருப்பவர்கள் யாருமில்லே...
எதை எதயோ சுற்றாதீர்,பதைபதைத்து நிற்க்காதீர்...

அண்ணாமலையை சுற்று சுற்று...அறுந்து போகும் பற்று
அண்ணாமலையை சுற்று சுற்று...அறுந்து போகும் பற்று
சுற்றுகிற உலகத்திலே,பலவிதத்தில் சுற்றுகிற மனிதர்களே...
வெற்றுக்கைகளுடன் பிறந்து பலவிதத்தில் பற்றுகளைப் பிடித்தவரே.....
கல்விக்கு சுற்றும் மாணவரும்,வேலைக்குச் சுற்றும் பட்டதாரியும்,
மேல் பதவிக்காகச் சுற்றும் மனிதர்களும்,சிறு உதவிக்காகச் சுற்றும் எளியவரும்,
கல்வியும் பதவியும் கலை தரும் ஞ்யானமும் மனிதனைச் சுற்றவில்லை...
வல்வினை தொல்வினை தன்னைச் சுற்றி வருவதை மனிதனும் உணரவில்லை...
உன்மேல் உன்னை விட பிரியமுல்லவர் உலகதிலுண்டோ?
உன்சுமைகலயே தன்சுமயென்று சுமப்பவருண்டோ?
பாறத்தை அண்ணாமலயில் போட்டு சுகமாய் பாடி ஆடிப்போ...
நேரத்தை வீணாய் கழிக்காமல் நீ சரணம் என்றே பாடிப்போ...
சுற்றுகிற உலகத்திலே,பலவிதத்தில் சுற்றுகிற மனிதர்களே...
வெற்றுக்கைகளுடன் பிறந்து பலவிதத்தில் பற்றுகளைப் பிடித்தவரே.....
இன்னும் ஒருமுறை பிறப்பீரா?மறுபடி மறுபடி இறப்பீரா?நற்பெருவழி வருவீரா?இல்லை ஒரு சிறுவழி போவீரா?
அண்ணாமலையை சுற்று சுற்று...அறுந்து போகும் பற்று
அண்ணாமலையை சுற்று சுற்று...அறுந்து போகும் பற்று
சுற்றுகிற உலகத்திலே,பலவிதத்தில் சுற்றுகிற மனிதர்களே...
வெற்றுக்கைகளுடன் பிறந்து பலவிதத்தில் பற்றுகளைப் பிடித்தவரே.....


Labels:  

Sunday, November 12, 2017

கடவுளுக்கு உருவம் உண்டா?

சிலைகளைக் கும்பிடுவது
சரியா? என்ற முஸ்லிம் அன்பரின் கேள்விக்கு ரமணமஹரிஷி  பதில்

ஒரு நாள் இரண்டு முஸ்லீம் அன்பர்கள் அவரை நாடி வந்தனர். அவர்களுக்கு உருவ வழிபாடு பற்றி சந்தேகம் இருந்தது.

பக்தர்: கடவுளுக்கு உருவம் உண்டா?

மஹரிஷி: அப்படி என்று யார் சொன்னது?

பக்தர்: அப்படி என்றால், கடவுளுக்கு உருவம் இல்லை என்றால், சிலைகளைக் கும்பிடுவது சரியா?

மஹரிஷி: கடவுளை விட்டு விடுவோம். ஏனென்றால் அவர் யாருக்கும் பிடிபடாதவர். உங்களை எடுத்துக் கொள்வோம். உங்களுக்கு உருவம் உண்டா?

பக்தர்: ஆம், எனக்கு உருவம் உண்டு; பெயர் உண்டு.

மஹரிஷி: அப்படி என்றால் உடல் அங்கங்களைக் கொண்ட ஒரு மனிதர் நீங்கள். ஆறடி உயரம், தாடி கொண்டவர். சரி தானே!

பக்தர்: நிச்சயமாக அப்படித்தான்!

மஹரிஷி: சரி, அப்படியானால் தூங்கும் போது உங்களை நீங்கள் காண்கிறீர்களா?

பக்தர்: விழித்து எழுந்தவுடன் நான் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறேன் என்பது தெரிகிறது. ஆகவே, அநுமானத்தின் மூலமாக நான் இப்படி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருக்கிறேன் என்பது தெரிய வருகிறது.

மஹரிஷி: நீங்கள் உடல் தான் என்றால் இறந்த பிறகு சவத்தை ஏன் புதைக்க வேண்டும்? உடல் தன்னைப் புதைப்பதை எதிர்க்க அல்லவா வேண்டும்?

பக்தர்: இல்லை, நான் பரு உடலில் உள்ளே இருக்கின்ற உள்ளுறை ஜீவன்.

மஹரிஷி: ஓ! அப்படி என்றால் உண்மையிலேயே நீங்கள் உருவம் இல்லாதவர் என்றாகிறது. ஆனால் இப்போது உடல் மூலமாக உங்களை அடையாளம் கண்டு சொல்கிறீர்கள். இப்படி உடலுடன் இருக்கும் போது அடையாளம் காணும் நீங்கள், உருவம் இல்லாத கடவுளை உருவமாகக் காண்பதில் என்ன தவறு இருக்கிறது?

கேள்வி கேட்டவர் திகைத்து விட்டார்.

Thursday, November 2, 2017

பசும்பொன் தேவர் அய்யா

திருநீறு பூசிய சைவசமய காவலர் தேவர் பெருமகனார்...!!!

தேவர் பெருமகனார் வாழ்ந்தகாலத்தில் தமிழகத்தில் திராவிடமும், நாத்திகமும் போயாட்டம் ஆடியது. பாரம்பர்ய சைவக் குடும்பங்களே திருநீறு இடாமல் தனிதமிழ் இயக்க மாயையில் சிக்கித் தவித்தனர்.

ஆனால்  தேவர் திருமகனார் நெற்றி நிறைய திருநீறோடு தமிழகத்தை வலம் வந்தார்.

ஒரு முறை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வடக்காடி வீதியில் மதுரை தமிழ்ச்சங்க பொன்விழா நடந்து. இச்சங்க தலைவராக இருந்த திரு பி.டி. ராஜன் அவர்கள், தாம் பேசவேண்டிய நான்காம் நாளில் தமக்கு பதிலாக அண்ணாவை பேசஅழைத்தார்.

அன்றைய விழாவில், மணிமேகலை என்ற சிறு குழந்தை அழகாக பேசி பரிசு பெற்றது.

இதற்க்கு பின் பேசிய அண்ணா, இந்த குழந்தை அருமையாக பேசினாள். அந்த காலமாக இருந்தால், ஞானப்பால் உண்டார் -ஞானம் பெற்றார் என்று கதைக் கட்டி இருப்பார்கள் என்று ஞானசம்பந்தரை  கிண்டல் செய்து பேசினார்.

இதனை கேள்விப்பட்ட தேவர் வெகுண்டு எழுந்தார். அன்னை மீனாட்சி கோயில் திருவீதியில் நாத்திகப் பேச்சா? அதுவும் சம்பந்தரை கிண்டல் செய்து? 

இது மதுரை தமிழ்சங்கமா அல்லது  நாத்திக சங்கமா?

தமிழ் ஞானசம்பந்தன் என்று வரிக்கு வரி உரைத்த சம்பந்தரை தமிழ்சங்கம் என்று பெயர் வைத்தோர் கௌரவப்படுத்தும் விதம் இதுதானா? என்று இடியென முழங்கினார்.

இதனை கேள்வியுற்ற மதுரை தமிழ்ச்சங்கத்தார் நடுநடுங்கினர்.

6ம் நாள் பேசவேண்டிய தேவர், அண்ணா பேசிய மறுநாள் அதாவது 5ம் நாளே மேடையேறி, அன்னை மீனாட்சி ஆலய வீதியில் அவளின் தவக்குழந்தையை அவதூறாக பேசும் தைர்யம் எப்படி வந்தது. சம்பந்தர் வரலாறை கட்டுக்கதை என்று கோயிலில்  பேசலாமா? இவ்வாறு அருளாளர்களை விமர்ச்சிக்கும் தமிழ்சங்க விழாவை இனி கோயிலில் நடத்த அனுமதிக்கமுடியாது. தமிழ்சங்கம் என்ற பெயரில் நாத்தீகம் பேசுவீற்களோ என்று இடியயென முழங்கினார்.
வெகுண்டெழுந்தார்.

திருநீற்றுப் பதிகம் அருளிய மண்ணில் திருநீறு பூசிய தேவர்பெருமகனார்.

வேறுவழியின்றி தமிழ்சங்கத்தார் மறுநாளில் இருந்து விழாவை தமுக்கம் மைதானத்திற்க்கு மாற்றினார்கள்.

சம்பந்தபெருமானை ஒருவார்த்தை கூறியதற்க்காக வெகுண்டு எழுந்தார் தேவர்.

ஆனால் இன்று திருமுறைகளை மதிப்பதாக கூறிக்கொண்டு உடம்பெல்லாம் ருத்திராட்சம் தரித்துக்கொண்டு, தமிழின் பெயரில் நாத்திகவாதிகளோடும், கம்யூனிசவாதிகளோடும் மேடையில் பங்குபோட்டுக்கொண்டு பெயர் புகழுக்காக அலைபவர்களும் உள்ளனர். இதில் சம்பந்தர் ஆரியர் என்ற சொல்லாடல்  வேறு.

இன்று தேவர் திருமகனார் போன்ற ஆன்மீகமும்  வீரமும் ஒருங்கே அமையப்பெற்ற தலைவர்  இல்லாமையல் வந்த வினைகள் இவை.

Sunday, September 3, 2017

ஓணம் பண்டிகை

ஓணத்துக்கும் தமிழனுக்கும் என்ன சம்பந்தம் சொல்லி ஒரு கூட்டம் கிளம்பி இருக்கனுமே.....

ஓணத்தின் தொடக்கம் தமிழகத்தில் உள்ள வேதாரண்யம் நகரில் இருக்கும் தேவார பாடல் பெற்ற தலமாகிய திருமறைக்காடு  ஆகும்.

ஒருமுறை பசியுடன் இருந்த #எலி ஒன்று திருமறைக்காடு கோவில் தீபத்தில் உள்ள நெய்யைத் தனக்கு ஆகாரமாக உட்கொள்ள வந்தது. தன்னையறியாமல் எலி தன் மூக்கால் அச்சமயம் அணையும் தருவாயிலிருந்த தீபத்தின் திரியை தூண்டிவிட்டதால் தீபம் சுடர் விட்டுப் பிரகாசிக்க ஆரம்பித்தது. சிவன் கோவில் விளக்கு அணையாமல் காத்த பயனின் காரணமாக #எலி அடுத்த பிறவியில் சிவபெருமானின் அருளால் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறக்க நேர்ந்தது. இதன் விபரத்தை திருநாவுக்கரசர் தனது திருக்குறுக்கை சிவஸ்தலம் பதிகத்தில் எட்டாம் திருப்பாட்டில் (4-ம் திருமுறை - "ஆதியில் பிரமனார் தாம்" என்று தொடங்கும் பதிகம்) தெரிவிக்கிறார்.

நிறை மறைக்காடு தன்னில் நீண்டு எரி தீபந் தன்னைக்
கறை நிறத்து  எலி தன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட
நிறை கடல் மண்ணும் விண்ணும் நீண்ட வானுலகம் எல்லாம்
குறைவறக் கொடுப்பர் போலும் குறுக்கைவீரட்டனாரே

விளக்கம் :

மந்திர சித்தி நிறைந்த வேதங்கள் பூசித்த மறைக்காட்டில் நீண்டு எரியும் விளக்கில்
ஊற்றியுள்ள நெய் தனைக் கறுத்த நிறத்தை உடைய #எலி உண்ண வந்த போது  அதன் மூக்கினை அத்தீப்பிழம்பு சுட்டிட அதனால் வெகுண்டு திரியைத் தூண்டி  விளக்கு நல்ல ஒளியோடு எரியச் செய்ய அந்த எலிக்கு மறுபிறப்பில் கடலால்
சூழப்பட்ட நிலஉலகம், தேவர் உலகம், நீண்ட மேலுலகங்கள் ஆகியவற்றை
எல்லாம் ஆளுமாறு மகாபலி சக்கரவர்த்தியாக பிறக்கச் செய்து
குறைவற வழங்கினார் குறுக்கை வீரட்டனார்.

----------------------------------------------------------------------------------

இனி யாராவது  ஓணத்துக்கும் தமிழனுக்கும் என்ன சம்பந்தம் கேட்ப்பேங்க.........

தென்னாடுடைய #சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

ரிக், யஜுர், சாம, அதர்வன வேதங்கள் ஆகிய நான்கு வேதங்களும் இத்தலத்திலுள்ள ஈசனை பூசித்த பெருமையை திருமறைக்காடு பெற்றுள்ளது.

நான்கு வேதங்களும் மனித உருவில் அருகிலுள்ள நாலுவேதபதி என்ற இடத்தில் இருந்து  கொண்டு இத்தலத்து இறைவனை முறைப்படி வழிபட்டு வந்தன.

கலியுகம் ஆரம்பிப்பதற்கு முன்பு இனிமேல் பூமியில் இருப்பது கடினம் என்றுணர்ந்த வேதங்கள் கோவிலின் முன்கதவுகளை நிரந்தரமாகப் பூட்டிவிட்டு சென்றன. அதுமுதல் பல ஆண்டுகளாக ஊர் மக்கள் பக்கவாட்டில் உள்ள ஒரு சிறிய திட்டிவாசல் வழியாகவே கோவிலினுள்ளே சென்று வந்தனர்.

ஒருமுறை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் திருமறைக்காட்டிற்கு வருகை புரிந்தனர். ஊர் மக்கள் யாவரும் சிறிய திட்டிவாசல் வழியாக கோவிலின் உள்ளே செல்வதையும், கோவிலின் முன்கதவுகள் மூடி இருப்பதையும் பார்த்து விபரம் கேட்டனர். வேதங்கள் பூசித்து மூடிவிட்டுப் போயிருந்த கதவுகளை பதிகம் பாடி திருநாவுக்கரசர் திறக்கவும், திருஞானசம்பந்தர் பதிகம் பாடி திறந்த கதவை மூடவும் செய்த அற்புதம் நிகழ்ந்த தலம் திருமறைக்காடு.

அப்பரும் சம்பந்தரும் பதிகம் பாடி மூடிய கதவை திறக்கவும் மூடவும் செய்த நிகழ்ச்சி இத்தலத்தில் பிரம்மோத்சவ விழாவாக மாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

இத்தலத்தில் தான் #திருஞானசம்பந்தர் கோளறு திருப்பதிகம் பாடியருளினார்.

பாண்டிய நாட்டு அரசி மங்கையர்க்கரசி பாண்டிய நாடு வரவேண்டும் என்று சம்பந்தருக்கு அழைப்பு விட்டார். மதுரை செல்வதற்கு முன் திருமறைக்காட்டில் தங்கியிருந்த திருநாவுக்கரசரிடம் கூறிவிட்டுப் போக வந்தார். மதுரையில் உள்ள சமணர்கள் கொடுந்தொழில் செய்பவர்களென்றும் தற்போது நாளும் கோளும் நன்றாக இல்லையென்று சொல்லி சம்பந்தர் மதுரை செல்ல வேண்டாம் என்று அறிவுரை கூறினார். அதற்கு சம்பந்தர் சிவபெருமானை வழிபடும் அடியார்களுக்கு நாளும் கோளும் நன்மையே செய்யும் இடர் செய்யாது என்று கூறி கோளறு திருப்பதிகம் பாடியருளினார்.

----------------------------------------------------------------------------

சிவதலம் பெயர் :திருமறைக்காடு (தற்போது வேதாரண்யம் என்று வழங்குகிறது)

இறைவன் பெயர் :மறைக்காட்டுநாதர், வேதாரண்யேசுவரர்

இறைவி பெயர் : வேதநாயகி, யாழினு இனிய மொழியாள்

செல்லும் வழி: திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக சுமார் 65 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து தெற்கே சுமார் 50 கி.மி. தொலைவிலும் வேதாரண்யம் உள்ளது. திருவாரூர், தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகள் செல்கின்றன. இங்கிருந்து 2 கி.மி. தொலைவில் அகஸ்தியம்பள்ளி என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இருக்கிறது.